ஏற்காடு அருகே கூலி தொழிலாளி மர்ம சாவு

ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் கிராமம்.பொது கிணற்றில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை ஊர் மக்கள் கண்டு ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஆறுமுகம்
கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஆறுமுகம்
Published on

 ஏற்காடு:

ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் கிராமம். இங்கு 30 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை ஊர் மக்கள் கண்டு ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த நபரின் உடலை ஊர்மக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் விசாரித்ததில் இறந்து கிடந்தவர் அதே கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி வரதன் என்பவரது மகன் ஆறுமுகம் என்பது உறுதியானது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இவரை யாராவது கொலை செய்யும் நோக்கத்தில் கிணற்றில் தள்ளி விட்டனரா அல்லது கால் தவறி ஆறுமுகம் கிணற்றில் விழுந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com