விவசாயிகளுக்கு மானிய விலையில் வெங்காய விதைகள் விநியோகம்

விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானிய விலையிலான வெங்காய விதைகளுடன் வெங்காய இருப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்பட்டது. பழ மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள், குறைந்த விலையிலான வெங்காய விதைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தோட்டக்கலை துறை சார்பில் கொங்கணாபுரம் பகுதி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்ட காட்சி.
தோட்டக்கலை துறை சார்பில் கொங்கணாபுரம் பகுதி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

எடப்பாடி:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதி விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானிய விலையிலான வெங்காய விதைகளுடன் வெங்காய இருப்பு கிடங்கு அமைப்பதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்பட்டது. வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அட்மா திட்டக்குழு தலைவர் பரமசிவம் அப்பகுதி விவசாயிகளுக்கு பலன் தரும் பழ மரக்கன்றுகள் மற்றும் இடுபொருள்கள், குறைந்த விலையிலான வெங்காய விதைகள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதனை தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரஸ்வதி நல உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர் தாமரைச்செல்வி, உதவி அலுவலர்கள் குப்புசாமி, ராஜா, செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com