ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்; சீருடையுடன் அணிவகுத்த தொண்டர்கள்

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அணிவகுத்த தொண்டர்கள்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அணிவகுத்த தொண்டர்கள்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை ரயில் நிலையத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போது வழி நெடுகிலும் கூடியிருந்த பெண்கள் ஆர் எஸ் எஸ் கொடிக்கு மலர் தூவி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலமானது நாகை அவுரித்திடலில் நிறைவடைந்தது.

அதன் பின்னர் அவுரித்தி டலில் கொடியேற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.

நாகையில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com