மளிகை கடையில் பதுக்கப்பட்ட ரூ.4 லட்சம் போதைபொருட்கள் பறிமுதல்

ஆத்தூர் அருகே பரபரப்பு மளிகை கடையில் பதுக்கப்பட்ட ரூ.4 லட்சம் போதைபொருட்களை பறிமுதல் செய்தனர்.இதை தொடர்ந்து 46 மூட்டை போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களுடன் ராஜஸ்தான் வாலிபர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களுடன் ராஜஸ்தான் வாலிபர்.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லியை அடுத்த தெடாவூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழங்குவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே தெடாவூரில் உள்ள ரமேஷ் என்பவரது மளிகை கடையில் மூட்டை மூட்டையாக போதைபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது ஒரு காரில் இருந்து போதை பொருட்கள் இறக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 46 மூட்டை போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து சின்னபொண்ணுவாசல் பகுதியை சேர்ந்த ராஜா(வயது39), ராஜஸ்தானை சேர்ந்த்ச சச்சின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். 46 மூட்டை போதை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com