சங்கரன்கோவில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி

அடகு நகைகளை சோதித்துப் பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது. நிதி நிறுவன மேலாளர் ரத்தினசேகர் மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கோமதியாபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது.

போலி நகை

இந்த நிதி நிறுவனத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த சச்சில் எட்வின் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி ஆதார் கார்டு மூலம் 24 கிராம் எடையுள்ள 2 வளையல்களையும், 48 கிராம் எடையுள்ள 4 வளையல்களையும் அடகு வைத்து ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 300 பெற்றுள்ளார்.

இந்நிலையில் அடகு வைத்த நபர் முறையாக வட்டி கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தில் உள்ளவர்கள் அவருக்கு போன் எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியாத தவறான நம்பரை அளித்துள்ளதாக தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து அவர் அடகு வைத்த நகைகளை சோதித்துப் பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன மேலாளர் ரத்தினசேகர் மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

மேலும் இவர் மீது நெல்லை டவுன் மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com