புதுச்சேரியில் இருந்து கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது

காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அந்துவானா பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது
Published on

மதுராந்தகம்:

புதுச்சேரியில் இருந்து மதுராந்தகம் அருகே சூனாம்பேடு வழியாக காரில் அதிக அளவு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் சூனாம்பேடு அருகே உள்ள வேலூர் கிராமம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மொத்தம் 1248 மது பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இதையடுத்து காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அந்துவானா பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சூனாம்பேடு பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com