கூரை வீடு எரிந்து சேதம்

அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது வானவெடி வெடித்தனர்.ராஜி (வயது 72) என்பவரின் வீட்டின் மீது தீப்பொறி விழுந்ததில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.
தீயனைப்பு துறையினர் தீயை அணைத்த போது எடுத்த படம்.
தீயனைப்பு துறையினர் தீயை அணைத்த போது எடுத்த படம்.
Published on

அருர்,

தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று மாலை அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது வானவெடி வெடித்தனர். அப்போது ராஜி (வயது 72) என்பவரின் வீட்டின் மீது தீப்பொறி விழுந்ததில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் நிறுத்தப்பட்டது.

கூரை வீடு தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கபட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com