மேட்டுப்பாளையத்தில் கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது

50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது
மேட்டுப்பாளையத்தில் கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை - தோலம்பாளையம் செல்லும் சாலையில் கடந்த நவம்பர் மாதம் என்ஜினீயரான யுவராஜ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இவ்வழக்கில் ெநல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற சூட் சுரேஷ் (32) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கொள்ளை போனவை மீட்கப்பட்டன.பின்னர் கைது செய்யப்பட்டவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மீது 30 -க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ேபாலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுரேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com