திண்டிவனம் அருகே கார் ஓர்க்ஷாப்பில் ரூ.1.75 லட்சம் கொள்ளை:நாட்டு வெடிகளை வைத்து சென்ற கொள்ளையர்கள்

பின்பக்க தகரம் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
திண்டிவனம் அருகே கொள்ளையடிக்கப்பட்ட கார் ஓர்க்‌ஷாப்பின் பின்புறம்.
திண்டிவனம் அருகே கொள்ளையடிக்கப்பட்ட கார் ஓர்க்‌ஷாப்பின் பின்புறம்.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கார் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல கடையை நேற்று இரவு மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அவசர பணிக்காக இரவு 11 மணிக்கு ஓர்க்ஷாப்பை மீண்டும் திறந்தார். உள்ளே சென்ற பார்த்தபோது பின்பக்க தகரம் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கல்லாவில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கபட்டிருந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

கொள்ளையர்கள் ஓர்க்ஷாப்பில் இருந்த காருக்கு அடியில் 2 மர்ம பொருளை வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனை கைப்பற்றிய போலீசார் அது நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருளா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை யர்கள் ஆட்டோவில் வந்து கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com