பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை

பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து பணத்தை திருடினர்.
பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் டென்சிங்.

இவர் பாப்பாநாட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு பணிகளை முடித்துவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன் மற்றும் பணத்தை திருடினர்.

இவர்களின் சத்தம் கேட்டு எழுந்த ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து டென்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com