கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை

பீரோவை உடைத்து அதில் இருந்த டி.வி மற்றும் லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்டீபன் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை
Published on

கோவை:

கோவை துடியலூர் அடுத்த டி.வி.எஸ் நகர் ரோடு, ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(40). தனியார் நிறுவன மேலாளர். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் உள்ள தியான மையத்திற்கு சென்றார்.

பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த டி.வி மற்றும் லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்டீபன் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தியான மையத்திற்கு சென்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com