பாளையில் துணிகரம்- பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் கொள்ளை

காலை வீட்டு வேலை செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து டேப்லட் மற்றும் ஒரு மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது.
கொள்ளை நடந்த வீடு.
கொள்ளை நடந்த வீடு.
Published on

நெல்லை:

பாளை சேவியர் காலனியை சேர்ந்தவர் ரெஜின் ராகுல் (வயது 36). இவர் பொதுப் பணித்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கதவு உடைப்பு

இவர்கள் நேற்று வீட்டை பூட்டிவிட்டு சாத்தான்குளத்தில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டிற்கு சென்றனர். இன்று காலை வீட்டு வேலை செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் இதுகுறித்து வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஷிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மொபட்

அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள டேப்லட் மற்றும் ஒரு மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com