

கொடைக்கானல்:
கொடைக்கானலில் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் முன்னிலையில் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை நடத்தினர்.
இதில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், கார்களில் வாகனம் ஓட்டிச் செல்வோர், அமர்ந்திருப்போர் இருவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது,
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, சிக்னல்களை கவனித்து வாகனத்தை இயக்குவது போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் பதித்த பிரசுரங்களை பஸ் நிலையம், ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர். கலையரங்கப் பகுதி சாலைகளில் வாகனங் களில் சென்றவர்களிடம் வழங்கினர்.