ஓட்டப்பிடாரம் அருகே சாலை விரிவாக்க பணிகள்

ரூ.460 லட்சம் மதிப்பீட்டில் ஒருவழி தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணி தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
சாலை விரிவாக்க பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
சாலை விரிவாக்க பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
Published on

தூத்துக்குடி:

ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பசுவந்தனை-ஓசனூத்து-எஸ்.கைலாச புரம் வரையிலான சாலையை விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.460 லட்சம் மதிப்பீட்டில் ஒருவழி தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப் படுத்தும் பணி தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

இதில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் நெடுஞ் சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார், உதவி பொறி யாளர் லதா, வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி, உதவி பொறியாளர் ஜெயபால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், பணி மேற்பார்வையாளர் சங்கர், ஊராட்சி செயலர் செல்வன், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, தி.மு.க. தொண்டரணி கோபால், கிளை செயலாளர்கள் பாலமுருகன், நிறையபூபதி, சண்முகம், கிளை பிரதிநிதி, சமுத்திரவேல் மற்றும் நிர்வாகிகள் அழகுராஜ், கருப்பசாமி, சண்முகநாதன்,ஆட்டோ கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com