நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
Published on

ஒகேனக்கல்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோைடமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் கடந்த 31-ந் தேதி நீர்வரத்து சற்று சரிந்து ஆயிரம் கனஅடியாக வந்தது. இந்த நீர்வரத்து இன்று 3-வது நாளாக தொடர்ந்து அதே அளவில் நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசல் நிலை யத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப் பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிக ளில் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், ஓட்டல்கள், கடைவீதி, மீன்விற்பனை கடைகள் ஆகிய கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரண மாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறை வதும் இருப்பதால், பிலிக் குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com