பல்லடத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய் துறையினர் அளவீடு

நீர்நிலை பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடங்கள் வழங்கி அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்த விபரங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பல்லடம் பகுதியில் உள்ள ராயர்பாளையம், செங்குட்டை, நாரணாபுரம், ஸ்டாலின் நகர், வெட்டுபட்டான் குட்டை ஆகிய இடங்களில் பல்லடம் வருவாய் துறையினர் அளவீடு பணி மேற்கொண்டனர்.

பல்லடம் தாசில்தார் தேவராஜ் அறிவுறுத்தல் படி வருவாய் ஆய்வாளர் அனிதா, பல்லடம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வருவாய் துறையினர் அளவீடு பணியை மேற்கொண்டனர் .நீர்நிலை பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடங்கள் வழங்கி அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com