அரூரில் ஓய்வு பெற்ற வருவாய்துறை அலுவலர்கள் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற வருவாய் துறை அலுவலர்கள் சங்க கூட்டம் அரூரில் நடைபெற்றது.மாநில நல்லாசிரியர் விருது இந்த ஆண்டு சிறந்த நடுநிலைப்பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியர் முருகனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அரூரில் ஓய்வு பெற்ற வருவாய்துறை அலுவலர்கள் சங்க கூட்டம்
Published on

அரூர்,

தருமபுரி மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய் துறை அலுவலர்கள் சங்க கூட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகேஉள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கு தலைவர் தங்கராஜி தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமானுஜம் வரவேற்புரை ஆற்றினார். ஏடிஎஸ்பி ராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியம், மாணிக்கம், நடராஜன், அரூர் வட்டாட்சியர் பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் சென்ற ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது இந்த ஆண்டு சிறந்த நடுநிலைப்பள்ளிக்கான விருது பெற்ற ராயப்பன் கொட்டாய் நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் பிரேமா, நிர்வாகிகள் ராதா, லட்சுமி, பிரபா, வசந்தாபாய், ஜீனத், விஏஓ மூர்த்தி, பதிவறை எழுத்தர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகி கோபால், சேஷாத்திரி, வேடியப்பன், ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜெயமணி, குமரேசன், முடிமன்னன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com