ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜெயபால் வரவேற்று பேசினார். துணைத் தலைவர்கள் சதாசிவம், கந்தசாமி முன்னிலை ஏற்று பேசினர்.

புதிய மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை தாமதமின்றி காத்திருக்க வைக்காமல் உடனடியாக வழங்கிடவேண்டும். ஓய்வூதியர்,குடும்ப ஓய்வூதியர் வாங்கும் ஓய்வூதிய விவரங்களை ஓய்வூதிய புத்தகத்தில் பதிவு செய்து வழங்க மாவட்ட கருவூல அலுவலர் ஆவண செய்ய வேண்டும்.

ஓய்வூதியர்,குடும்ப ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியை பெற்றுக் கொள்ள நாமினேட் செய்து சமர்ப்பிக்கும் படிவங்களை தாமதமின்றி ஏற்று ஒப்புதல் வழங்கிட வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். மருத்துவப் படி ரூ.1000-மாக உயர்த்தி வழங்கவேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கு ஆகும் செலவினங்களை முழுமையாக ஏற்கவேண்டும்.

ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் இறந்தால் ஈமச்சடங்கிற்கு முன்பணமாக ரூ.25000 வழங்கவேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் ஜெயபால் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com