கேளம்பாக்கம் அருகே கொத்தடிமையாக இருந்த 27 பேர் மீட்பு

11 சிறுவர்கள், 6 பெண்கள், உள்பட 27 பேர் திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.மீட்கப்பட்டவர்களை சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
கேளம்பாக்கம் அருகே கொத்தடிமையாக இருந்த 27 பேர் மீட்பு
Published on

திருப்போரூர்:

கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் ஊராட்சியில் கொத்தடிமைகளாக மரம் வெட்டும் தொழில் செய்து வந்த 11 சிறுவர்கள், 6 பெண்கள், உள்பட 27 பேர் திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.

அவர்கள் அனைவரும் திருத்தணி அருகே கிருஷ்ணாபுரம், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மரம் வெட்டும் வேலை உள்ளதாக அழைத்து வந்து கொத்தடிமைகளாக பல வருடங்களாக வேலை வாங்கி வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com