சாலை பள்ளங்கள் சீரமைப்பு

அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் முதல் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
நல்லம்பள்ளி சாலையில் பள்ளங்கள்  சீரமைப்பு பணிகள் நடைபெற்ற காட்சி.
நல்லம்பள்ளி சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற காட்சி.
Published on

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ள சர்வீஸ் சாலை மற்றும் பாலஜங்கமனஹள்ளி, நாகர்கூடல் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது.

இச்சாலையில் தினந்தோறும் அதிக அளவில் பள்ளி , கல்லூரி வாகனங்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் முதல் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் மேம்பாலம் அருகே உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கியதால் அதில் நீந்தியவாறு வாகனங்கள் சென்றன .

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் தற்போது பருவமழை காலம் தொடங்கவுள்ளதால் அதற்கு முன்பாக சாலையை சீரமைக்கும் பொருட்டு சாலையில் தொடர் சேதத்தை தடுக்கும் பொருட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com