அன்னவாசல் ஊராட்சியில் ரேசன் கார்டு குறைதீர் முகாம்

தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது.
முகாமில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுதாரர் மனு கொடுத்தனர்.
முகாமில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுதாரர் மனு கொடுத்தனர்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உஷாபொன்னி வளவன் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றார்.

இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.

இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

ஊராட்சி செயலர் சத்தியா, ரேசன் கடை ஊழியர் ஜெகதீஸ், தரங்கம்பாடி வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com