மதுவிற்ற வாலிபர் கைது

போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார் 30 பாட்டில்கள் பறிமுதல்
மதுவிற்ற வாலிபர் கைது
Published on

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில் துரைபெரும்பாக்கம், ஈராளஞ்சேரி பகுதிகளில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது துரைபெரும் பாக்கம் கிராமத்தில் போலீசாரை கண்டவுடன் ஓட முயன்ற வாலிபரை பிடித்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் துரைபெரும்பாக்கம் கிராமம், கிறிஸ்டியன் தெருவை சேர்ந்த மதனகாமராஜ் (29) என்பது தெரியவந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com