விஷம் குடித்து பெண் தற்கொலை

குடும்ப தகராறில் விபரீதம் போலீசார் விசாரணை
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சந்தபேட்டை பகுதி யைச் சேர்ந்தவர் சின்னதுரை, லாரி டிரைவர். இவரது மனைவி சத்தியா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சத்தியா வீட்டிலிருந்த விஷத்தை குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சத்தியா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com