சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரூ.42 லட்சத்து 49 ஆயிரம் உண்டியல் காணிக்கை

130 கிராம் தங்கமும் கிடைத்தது கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரூ.42 லட்சத்து 49 ஆயிரம் உண்டியல் காணிக்கை
Published on

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்யதேசங் களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு யோக நரசிம்மர் திருக்கோவில், யோக ஆஞ்சநேயர் திருக்கோவில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், ஊர் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உள்ளன.

கோவில்களில் வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட உண் டியல்களை திருக்கோவில் ஆணையர் ஜெயா முன்னிலையில் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. இதில் உண்டியல் காணிக்கையாக 42 லட்சத்து 49 ஆயிரத்து 536 ரூபாய் பணமும், 130 கிராம் தங்கமும், 372 கிராம் வெள்ளியும் எண்ணப்பட்டு கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் சூப்பிரண்டு சுரேஷ், கிஷோர் மற்றும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com