பஸ் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம்

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்
பஸ் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் ஜஸ்வந்த் (வயது 15). இவர் ராணிப்பேட்டை பெல் அருகே உள்ள பள்ளியில் பிளஸ் - 1 படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெல் டவுன்ஷிப் பகுதியில் இருந்து அரசு பஸ்ஸில் வந்தார். அப்போது படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது பஸ் படிகட்டில் இருந்து திடீரென மாணவன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் ஜஸ்வந்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com