வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

கலெக்டர் வளர்மதி தலைமையில் உறுதி மொழி ஏற்பு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
Published on

ராணிப்பேட்டை:

வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கி பேசினார். பின்னர் கல்லூரி மாணவிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்து பேசினார். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.

சாலைப் பாதுகாப்பில் ராணிப்பேட்டை என்ற தலைப்பில் நெடுஞ்சாலை துறை கோட்டபொறியாளர் செல்வகுமார் பேசினார்.

கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர் பாலாஜி சிங், ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இராமலிங்கம் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். பின்னர் தோழன் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலாஜி, அதிகாரிகள் சரவணன், சத்திய சாய், நிதின் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com