ஆற்காட்டில் போலீசார் கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்தது முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆற்காட்டில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆற்காட்டில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர்.
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆற்காட்டில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பொதுமக்களிடத்தில் அச்சத்தினைப் போக்கும் வகையில் ஆற்காடு நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையில் ஆயுதப்படை மற்றும் ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தைச் சேர்ந்த 145 போலீசார் ஆற்காடு அண்ணா சிலை அருகே இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவடைந்தது.

இதில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, மற்றும் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் உள்பட போலீசார் கலந்து கொண்டு துப்பாக்கியை ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com