கொட்டிய தேளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பேரிடர் மீட்பு படை வீரர்

டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது
கொட்டிய தேளை படத்தில் காணலாம்.
கொட்டிய தேளை படத்தில் காணலாம்.
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஏற்படும் புயல் இடர்பாடுகள் போன்ற நேரங்களில் இங்கிருந்து வீரர்கள் அனுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை தேசிய மீட்பு படை வீரர் அரவிந்த் என்பவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவரை கருந்தேள் ஒன்று கொட்டியுள்ளது. வலி தாங்க முடியாமல் தவித்த அரவிந்த் தேளுடன் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

இதனால் பணியில் இருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் டாக்டர்கள் அரவிந்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com