தஞ்சையில், ராமர் கோவில்களில் ராமநவமி வழிபாடு

ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிறப்பு மலர் அலங்காரத்தில் நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது.
சீதாதேவி சமேத ராமன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளித்தார்.
சீதாதேவி சமேத ராமன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளித்தார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அய்யங்க டைத் தெருவில் அமை ந்துள்ள பஜார் ராமர் கோவிலில் இராம நவமியை முன்னிட்டு சீதா தேவி சமேதராக இராமபிரான் பட்டாபிஷேகம் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராமாபிராண் அருகில் லெட்சுமணன், பரதன், சத்ருகன் மற்றும் அனுமன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

இதேபோல் தஞ்சாவூர் மேலவீதி விஜய ராமர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com