உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி
Published on

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா உலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22 மாணவ-மாணவியர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 22 பேரும் தேர்ச்சி பெற்றனர். 3 மாணவ- மாணவிகள் 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றனர். 15 பேர் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். கணிதப்பாடத்தில் ஒரு மாணவர் 100 மதிப்பெண்ணும், அறிவியல் பாடத்தில் 3 பேர் 100 மதிப்பெண்ணும் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவி கார்னிஷா-488, ஜீவா-488, மனோ ஆனந்தி-488 கவி-485, சர்மிளா-476, சந்துரு-476 ஆகியோரை தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com