கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனங்கள்

பரமக்குடி, எமனேஸ்வரத்தில் இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று கிடந்தன.
இருசக்கர வாகனங்கள்.
இருசக்கர வாகனங்கள்.
Published on

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பகுதியில் இரு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.  இந்த வாகனங்களுக்கு யாரும் உரிமம் கொண்டாடதால் நீண்ட நட்களாக போக்குவரத்து இடையூறாக நின்று கொண்டிருந்தன.

இந்த நிலையில்  தாலுகா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் முத்துமாணிக்கம்,  தேவேந்திரன் ஆகி யார் ரோந்து சென்றபோது  பாம்பூர் மற்றும் பெருமாள்கோவில் ஆகிய இடங்களில் 6 இருசக்கரவாகனங்கள் கேட்பாரற்று நிற்பதை பார்த்தனர். 

அந்த வாகனங்களை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். வாகனங்களின் உரிமையாளர் விபரம் கண்டுபிடிக்க முடியவில்லை.  அதனை தொடர்ந்து வாகனங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பொறுப்பில் வைக்கப்பட்டன. 

இந்த வாகனங்களின் உரிமையாளர் யாரேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் பரமக்குடி தாலுகா காவல்நிலையத்தில் அதனை காண்பித்து பெற்று செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர்.

எமனேசுவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த இருசக்கரவாகனங்களை கைப்பற்றிய  சப்&இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வம், நாகசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் 15 தினங்களுக்குள் ஆவணங்களை காண்பித்து பெற்றுக்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com