

முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிபவர் மாரிமுத்து (52).
இவர் பணியில் இருந்தபோது ஏனாதி கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் மருதுபாண்டி (33) என்பவர் தனது நிலத்தை அளந்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்தியதாக கூறி சர்வேயர் மாரிமுத்துவை வேலை செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாகபேசி மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சர்வேயர் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன், சப்இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குபதிவு செய்து மருதுபாண்டியை தேடி வருகின்றனர்.