கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணிகள்

கீழக்கரையில் தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
நீண்ட நாட்கள் ஆகியும் சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
நீண்ட நாட்கள் ஆகியும் சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
Published on

கீழக்கரை

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. வடக்குத்தெரு 7-வது வார்டு உட்பட்ட பகுதியான பிரதான சாலையாக இருக்கும் சி.எஸ்.ஐ சர்ச் முதல் பாபு அப்துல்லா ஆட்டோ நிறுத்தம் வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

1 மாதத்திற்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றும் பணி துவங்கப்பட்டது. பின்பு ஜல்லி கற்களை பரப்பி 15 நாட்களுக்கு மேலாகிவிட்டது இதுவரையிலும் தார் சாலை அமைக்கப்படவில்லை.

தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அந்த பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடிய சிறு குழந்தைகள் அச்சத்தில் செல்கின்றனர்.

இது குறித்து நடவடிக்கை எடுத்து தார்சாலையை விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com