மாணவர்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி பெருமை தேடி தர வேண்டும்- கலெக்டர் பேச்சு

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் மாணவர்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி பெருமை தேடி தர வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.
விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் ஆகியோர் பேசினர்.

முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். கலை நிகழ்ச்சி களை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

ஆர்வத்துடன் கலையை கற்கும்போது மாணவர்களின் திறன் வெளிக்கொண்டு வருவது மட்டுமின்றி அதன் மூலம் சமுதாயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

கலைத் திருவிழாவிற்காக பங்கேற்க 33 ஆயிரம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அதேபோல் வட்டார அளவில் 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.

கலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகையில் உதவியாக இருக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிக அளவு மாணவ, மாணவிகள் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தி உங்களுக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ரவி, நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com