மாநில அளவிலான சிலம்ப போட்டி

மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான சிலம்ப போட்டி
Published on

பரமக்குடி

பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி, முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, குரு ஏழுமலை, தேசிய தலைவர், அகத்திய ஞானம் நிறுவன பொதுச் செயலாளர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பரமக்குடி நகர் மன்ற கவுன்சிலர் அப்துல் மாலிக், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

போட்டியை அப்துல்கலாம் பள்ளி குழுவினர் மற்றும் பாரதி விளையாட்டு சங்க தலைவர் அசான் சண்முகவேல் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com