

கீழக்கரை
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் தொடர்ந்து 2 வருடங்களுக்கும் மேலாக ரோட்டில் கழிவுநீர் செல்வதால் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நகராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் அப்பகுதி மக்கள் அதிருப்திக்கு உள் ளாகியுள்ளனர்.
6வது வார்டில் கிழக்குத் தெரு, பட்டாணி அப்பா தெரு, கிழக்கு குறுக்குதெரு உள்ளிட்ட 7 பிரதான தெருக்களும் 25 குறுகிய சந்துகளும் உள்ளது.4,200 பேர் வசித்து வருகின்றனர். 6வது வார்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரோட்டின் நடுவே கழிவுநீர் தேங்கி ஓடுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது.கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. எனவே அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீர் குழாயை சீரமைத்து கழிவு நீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் கம்பங்களில் மின்விளக்கு ஏதுமின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தெருக்களில் நடந்து செல்வோர் டார்ச் லைட் வெளிச்சத்தில் செல் கின்றனர். தெரு ஓரங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் சாலை யோரத்தில் குப்பைகளை கொட்டும் போக்கு தொடர்கிறது.
கழிவு நீர் வாறுகாலில் அடைப்பு உள்ளதால் அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி பகலிலும் இரவிலும் கடிக்கிறது. ரோடு கள் குண்டும் குழியுமாக உள்ளதால் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும். குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண் டும் என்று வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.