

தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் வட்டார கல்வி அலுவலர் வசுந்தராபாரதி தலைமையில நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜிப்ரிக், துணை தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார்.
மாணவி சாஹித்யா குழுவினரின் பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. பெற்றோர்களில் ஒருவரான ரம்யா பள்ளி மேலாண்மைக்குழு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2 வார்டு உறுப்பினர்கள் உட்பட 20பேர் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.