காணாமல் போன விவசாயி பிணமாக மீட்பு

கடலாடி அருகே காணாமல் போன விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.இவர் இந்தப்குபதியில் உள்ள பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார்.
காணாமல் போன விவசாயி பிணமாக மீட்பு
Published on

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழச் செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனம் (வயது45), விவசாயி. இவர் இந்தப்குபதியில் உள்ள பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார்.

கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மயில்வாகனம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மயில்வாகனத்தின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில், சிக்கல் அருகே உள்ள ஆண்டிச்சிகுளம் கண்மாய் மேற்கு பகுதியில் விவசாயியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர்.

கடலாடி இன்ஸ் பெக்டர் ஜான்சிராணி, கீழச் செல்வனூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச் சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பிணமாக கிடந்தது. மயில்வாகனம் என்பதை உறுதி செய்தனர். அவரது உடலை போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாயி மயில்வாகனம் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com