வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை

ராமநாதபுரத்தில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு கையேட்டை வழங்கி போலீசார் அறிவுரை கூறினர்.
இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு சாலை விழிப்புணர்வு கையேடு வழங்கும் போலீசார்.
இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு சாலை விழிப்புணர்வு கையேடு வழங்கும் போலீசார்.
Published on

ராமேசுவரம்

ராமேசுவரம்&திட்டக்குடி கார்னர்பகுதியில் போலீசார் சாலைவிழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது வாகனஓட்டிகளுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு போலீசாரால் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை போலீசார் வழங்கினர்.

அப்போது செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும், ஆட்டோ மற்றும் வேன் போன்ற வாகனங்களில் அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது, சாலையை கடக்கும் போது போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது. 

இருசக்கர வாகனத்தில் ஒருவருக்குமேல் ஏற்றிச்செல்லக்கூடாது, ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், வாகனத்தில் அதிக சுமைகளை ஏற்றி செல்லக்கூடாது, பொதுமக்களுக்கும் எதிர்வரும் வாகனங்களுக்கும் இடையூறாக பொருட்களை வாகனத்தில் ஏற்றிச்செல்லக்கூடாது போன்ற அறிவுரைகளை வாகன ஓட்டிகளுக்கு போலீசார் வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com