முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் 2,170 பேர் பங்கேற்றனர்.
தேர்வு
தேர்வு
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகளில் 2,657 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,170 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது.

ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் பொறியியல் கல்லூரி, கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் தலா 100 கணினிகள் அமைக்கப்பட்டு கணினி வழியாக முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் 1 நிலை மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 12ந்தேதி (சனிக்கிழமை) முதல் நடந்தது.

செய்யதுஅம்மாள் கல்லூரியில் 1,503பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 1,213பேர் பங்கேற்றனர். கீழக்கரை முகமதுசதக் பொறியியல் கல்லூரியில் 1,154பேருக்கு, 957பேர் தேர்வு எழுதினர். 

2 தேர்வு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 2,657 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,170 பேர் பங்கேற்றனர். 487 பேர் பங்கேற்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com