

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் முத்தமிழ் செல்வி பூர்ணவேல் தலைமையில் நடந்தது.
ஒன்றிய ஆணையாளர் செந்தாமரைச் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு, ஊராட்சி உதவி தலைவர் ஜீவரத்தினம் சங்கர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார்.
வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படைத்தேவைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாலாந்தரவை ஊராட்சியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும். வாலாந்தரவையில் மயானம், உடைச்சியார் வலசை கிராமத்தில் புதிய ரேஷன்கடை ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து உடைச்சியார் வலசை கிராமத்தில் அங்கன்வாடி மையம், தெற்கு காட்டூரில் பயணியர் நிழற்குடை கட்ட சட்டமன்ற தொகுதி நிதி ஒதுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
பொதுமக்கள் கோரிக்கை வைத்த சில நிமிடங்களிலே சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஊராட்சி மக்களின் மற்ற கோரிக்கைகள் வரும் நிதியாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
இந்தகூட்டத்தில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, கவிதா கதிரேசன், கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், மாணவரணி செயலாளர் இப்திகார், பி.டி.ராஜா, மண்டபம் ஒன்றிய முன்னாள் தி.மு.க.செயலாளர் கனகராஜ், முன்னாள் சேர்மன் கலைமதி ராஜா, கீழக்கரை கவுன்சிலர் சுகைபு, சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.