மங்கள விநாயகர் கோவில் வருடாபிஷேகம்

மங்கள விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
மங்கள விநாயகர் கோவில் வருடாபிஷேகம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கலெக்டர் வளாகத்தில் 34 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் டி பிளாக் மங்கள விநாயகர் கோவிலின் 7-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி மகா கணபதி ஹோமம் நடந்தது.

14 கும்பங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்பு கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மங்கள விநாயகர், நாகநாதர் மற்றும் நவக்கிரகங்களுக்கு பூரண கும்ப அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் மங்கள விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் குருக்கள் கோபால கிருஷ்ணன், ராஜாராம், ரவி மற்றும் விழா கமிட்டியாளர்கள் வருடாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com