

தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள புனித செங்கோல் மாதா திருத்தலத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 2ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.
புனித வாரத்தின் தொடக்கமான உயிர்ப்பு பெருவிழாவின் முந்தைய ஞாயிற்றுக்கிழமையான இன்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலையில் சிலுவை செய்து பவனியாக வந்தனர்.
அதனைத்தொடர்ந்து புனித செங்கோல் மாதா திருத்தலத்தில் அருட்தந்தை அருள்ஜீவா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
அதேபோல் தொண்டியில் கடற்கரை எதிரே உள்ள புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் அருட்தந்தை சவரிமுத்து தலைமையில் அருட்தந்தை லாரன்ஸ் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.