திருவெற்றியூரில் திருவிளக்கு பூஜை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

திருவெற்றியூரில் திருவிளக்கு பூஜை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது. 1008 திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி அளித்தனர்.
திருவெற்றியூரில் திருவிளக்கு பூஜை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
Published on

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பிரசித்தி பெற்ற திருவெற்றியூர் பாகம்பிரியாள் வன்மீக நாதர் கோவில் உள்ளது. கோவில் முன்பு இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் 1008 திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை இயக்கத்தின் நிறுவன தலைவர் இளையராஜா செய்து வந்தார்.

இந்தநிலையில் திருவெற்றியூர் பஞ்சாயத்து தலைவர் திருவிளக்கு பூஜை நடத்துவதால் இடநெருக்கடி, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளக்கு பூஜை நடத்தக்கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, ஆண்டுதோறும் விளக்கு பூஜை நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை இயக்கத்தின் மாநில தலைவரான இளையராஜா கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதனைப்பார்த்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிப திகள் வழக்கம் போல 1008 திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று திருவெற்றி யூரில் 1008 திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com