பணம்-பரிசு பொருட்கள் பறிமுதல்

கீழக்கரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனை பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல்.
பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல்
பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல்
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளன. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு கீழக்கரை முக்கு ரோட்டில் துணை தாசில்தார் பழனிகுமார் தலைமையில் சப்இன்ஸ் பெக்டர் ராஜசேகர், போலீஸ்காரர் தர்மா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 300 பெட்டிகளில் கப் அன்டு சாசர் பரிசு பொருட்கள் இருந்தன. முறையான ஆவணம் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். 

அதேபோன்று கீழக்கரை வந்த பால் வாகனத்தில் ஆவணம் இல்லாமல் ரூ.56ஆயிரத்து620 எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கீழக்கரை நகராட்சியில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com