சுகாதார ஆய்வாளரிடம் ரூ.80 ஆயிரம் நூதன மோசடி

சுகாதார ஆய்வாளரிடம் ரூ.80 ஆயிரம் நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதார ஆய்வாளரிடம் ரூ.80 ஆயிரம் நூதன மோசடி
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே வட்டான் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் டெண்டுல்கர் (வயது 24). இவர் உச்சிப்புளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி ஒரு மொபைல் எண்ணில் இருந்து அவர் சம்பள வரவு, செலவு வைத்திருக்கும் வங்கி கணக்கில் பான் கார்டு பதிவு செய்யாமல் இருப்பதினால், வங்கி கணக்கினை நிறுத்தம் செய்ய போவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை பார்த்த சச்சின் டெண்டுல்கர் அதனுடன் வந்த அப்டேட் செய்ய கொடுக்கப்பட்ட லிங்கை இணைபபு செய்து, அதில் கேட்கப்பட்ட சுய விபரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணினை தொடர்ந்து 3 முறை பதிவு செய்தார்.

இதையடுத்து அடுத்த அவரது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து ரூ.79 ஆயிரத்து 998 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி ராமநாதபுரம் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com