

தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்றது. மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சங்கர்லால் குமாவத் வானங்களை ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மையங்களையும் ஆய்வு செய்தார். தொண்டி சோதனை சாவடியில் பறக்கும்படையினர் வானங்களை சோதனை செய்து வருகின்றனர்.
தொண்டி ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இரு பேரூராட்சி பகுதிகளிலும் 15 வார்டுகளுக்கு வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொண்டி முதல்நிலை பேரூராட்சி பகுதியில் 15 வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் 18 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.