இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகள்

இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், எஸ்.பி ஆய்வு செய்தார். தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.
 பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆய்வு செய்தனர்.
 பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆய்வு செய்தனர்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில் இமானு வேல் சேகரன் நினைவி டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முருகேசன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு காமிராக்கள், வி.ஐ.பி.க்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், புற காவல் நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com