ஊரணி நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்கம்

முதுகுளத்தூர் அருகே ஊரணி நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
குடிநீர் திட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் குமரேசன் திறந்து வைத்தார்.
குடிநீர் திட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் குமரேசன் திறந்து வைத்தார்.
Published on

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட  தட்டான்குடியிருப்பு  கிராமத்தில் ஊரணி நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தொடக்கவிழா நடந்தது.

என்.எஸ்.இ. பவுண்டேசன் ரூ.3 லட்சம் நிதி உதவியுடன் ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி நீர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் உதவியுடன் கட்டப்பட்ட குளத்தின் நீரை தூய்மைப்படுத்தும் வடிநீர் தொட்டியை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் குமரேசன் திறந்து வைத்தார்.

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன், ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா முதுநிலை துணைத்தலைவர் என்.அமுதசேகரன், முதுநிலை மேலாளர் ஜி.கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், சாத்தனூர் ஊராட்சிமன்ற தலைவர் அழகம்மாள் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கிராம பொருளாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா நிறுவனம் மூலம் 45 குளங்கள் தூர்வாரப்பட   உள்ளதாக அமுதசேகரன் கூறினார்.  விழாவில் கிராம தலைவர் ராஜேந்திரன், கிராம செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com