தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி

தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி நடந்து வருகிறது. தி.மு.க. கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க. இருசக்கர வாகன பேரணி வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியினரை படத்தில் காணலாம். 
தி.மு.க. இருசக்கர வாகன பேரணி வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியினரை படத்தில் காணலாம். 
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவரும், வள்ளுவர் மண்டலத்தின் தென்மண்டல ஒருங்கிணைப் பாளருமான ஆர்.கே.கே.கார்த்திக் தலைமையில் வந்த தி.மு.க இளைஞரணி இருசக்கர வாகன பேரணியை வடக்கு நகர் தி.மு.க சார்பில் வடக்கு நகர் செயலாளரும்,நகர சபை தலைவருமான, ஆர்.கே.கார்மேகம் தலைமையில் தி.மு.கவினர் வரவேற்றனர்.

தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதைெயாட்டி இளைஞர் அணி மாநில மாநாட்டை ஒட்டி இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இந்த இருசக்கர வாகன பேரணி செல்லும் நிலையில் நேற்று ராமநாதபுரம் வருகை தந்தது.

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு வருகை தந்த இருசக்கர வாகன பேரணிக்கு வடக்கு நகர் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.முன்ன தாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, கலைஞ ரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வடக்கு நகர் தி.மு.க. சார்பில் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர்.

இந்த நிகழ்வில் ராமநாத புரம் நகர் மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான்,மாவட்ட பொறி யாளர் அணி துணை அமைப்பாளர் பொறியாளர் கா.மருதுபாண்டி,கீழக்கரை இளைஞரணி துணை அமைப்பாளர் எபன்,உட்பட ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com